கனடாவில் ஹிந்து கோவில் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம் | Attack on Hindu temple in Canada: India condemns
டொரான்டோ, கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஹிந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் பிராம்ப்டன் நகரில் கவுரி சங்கர் கோவில் அமைந்துள்ளது. இந்திய பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் இக்கோவில் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி உள்ளனர். இது, அங்குள்ள இந்திய சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. … Read more