தளபதி67 படத்தில் விஜயுடன் ப்ரியா ஆனந்த்…

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி67 படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba 😉@PriyaAnand is officially part of #Thalapathy67 now 🔥#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN — Seven Screen Studio (@7screenstudio) January … Read more

திருவாரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

திருவாரூர்: குடவாசல் அருகே அம்மையப்பன் பகுதியைச் சேந்த கவியரசன் வயது 24 மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கவியரசன் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகவின் ஆதரவை கோரியுள்ளன. அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகாததால் முடிவு எடுக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இரட்டை இலையை வைத்திருக்கும் அதிமுக அணியை மட்டுமே ஆதரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என்று கூறிய நிலையிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று இன்றைய கூட்டத்திலும் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில் … Read more

புதுச்சேரி கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பு: கடலோரத்தில் மணல் அலை வீசுவதால் மக்கள் பாதிப்பு

புதுச்சேரி: வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் கடலில் இருந்து வீசும் தரை காற்றினால் மணல் அலை அலையாக சாலைகளில் பரவி வருகிறது. இலங்கை அருகே தென்மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 3-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 45 கிலோ மீட்டர் முதல் 55 … Read more

சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுமைக்கும் அறியப்படும் நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதைத்தொடர்ந்து, அடுத்ததாக அவர் நடித்த சாஹோ திரைப்படத்தின் மீது எல்லோருக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்சன் படமாக உருவான இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த படம் தோல்வியை தழுவி பிரபாஸுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக படத்தின் இயக்குனரான சுஜித் பிரபாஸின் திறமையையும் புகழையும் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் என்று விமர்சனங்கள் … Read more

கடலூர்: நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்; குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் மகன் சரவணக்குமார் பொறியியல் பட்டதாரி. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியிருக்கிறார் சரவணக்குமார். சரவணக்குமார் அதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சரவணக்குமார் கிடைக்காததால், அவர் பெற்றோரும், உறவினர்களும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சரவணக்குமாரின் புகைப்படத்தைக் கொண்டு போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள் … Read more

வயதான தம்பதி கொடூர கொலை.. பணம், நகைகளை கொள்ளையடித்து மிளகாய் பொடி தூவிச்சென்ற மர்மகும்பல்..

பெரம்பலூர் அருகே வீடு புகுந்து வயதான தம்பதியை கழுத்தை அறுத்து கொலை செய்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொண்டப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் – மாக்காயி தம்பதியின் 4 மகள்கள் திருமணமாகி, அதே ஊரில் வசித்து வரும் நிலையில், தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்றிரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பின்வாசல் வழியாக வீடு புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க … Read more

கரூர் | அமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் – மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேற்றம்

கரூர்: அமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக கவுன்சிலர் கரூர் மாநகராட்சி மாமாமன்ற கூட்டத்தில் இருந்து பாதுகாவலர் மூலம் வெளியேற்றப்பட்டார். பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மற்றொரு அதிமுக கவுன்சிலர் பங்கேற்றார். கரூர் மாநகராட்சி அவசரக்கூட்டம் மேயர் கவிதா தலைமையில் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் இன்று (ஜன. 31 தேதி) நடைபெற்றது. ஆணையர் ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் 1வது வார்டு உறுப்பினர் சரவணன் (திமுக) மாநகராட்சி பகுதியில் சாலைகள் மிகமோசமாக இருக்கிறது என்றவர், … Read more

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வீடியோ மோட்: வாட்ஸ்அப் அப்டேட்

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவையை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக வீடியோ மோடை கொண்டு வந்துள்ளது மெட்டா. இது இந்த செயலியில் புதிய கேமரா மோட் என்றும் சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என … Read more