தமிழ்நாடு தகவல் ஆணையம் சீரமைக்கப்பட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாடு தகவல் ஆணையம் முற்றிலுமாக சீரமைக்கப் பட வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையரும், 6 தகவல் ஆணையர்களில் நால்வரும் ஓய்வு பெற்று விட்டதால், ஆணையம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி … Read more

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்; இந்தியா கண்டனம்.!

பாகிஸ்தானின் அமைதியான வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள உயர் பாதுகாப்பு மண்டலத்தில் நேற்று மதிய பிரார்த்தனையின் போது வழிபாட்டாளர்கள் நிரம்பியிருந்த மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று மதியம் 1.40 மணியளவில் போலிஸ் லைன்ஸ் பகுதியில் உள்ள மசூதிக்குள் காவல்துறை, ராணுவம் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உட்பட வழிபாட்டாளர்கள் சுஹ்ர் (பிற்பகல்) தொழுகையை நடத்திக் கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முன் வரிசையில் இருந்த தற்கொலை குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதால், பக்தர்கள் … Read more

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து கனடாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

கடந்த வாரங்களில் அவுஸ்திரேலியாவில் உள்ள 3 கோவில்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இப்போது கனடாவில் உள்ள இந்து கோவில் ஒன்றில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்து மத கோவில்கள் மீது தாக்குதல் வெளிநாடுகளில் சமீப காலங்களாக இந்து மத கோவில்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரங்களில் அவுஸ்திரேலியாவில் மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், பிராம்ப்டன் நகரத்தில், கௌரி சங்கர் மந்திர் என்று … Read more

நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும்! மைசூரைச் சேர்ந்த முதியவர் வழக்கு..

சென்னை:  நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என மைசூரைச் சேர்ந்த முதியவர்  வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறு ஒரு திகில் படம் போல உள்ளது. அவரது வாழ்வின் மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. இருந்தாலும், அவரது மக்கள், அண்ணன், வாரி என அவ்வப்போது சிலர் புறப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.  ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தன்னை … Read more

கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீது கொலை முயற்சிததாக வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றசாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்துள்ளனர். திருச்செந்தூரில் கடந்த 2011-ம் … Read more

பதிவுத் துறையின் வருவாய் நடப்பு ஜனவரி மாத முடிவில் ரூ.14,043 கோடியை எட்டியது

சென்னை: பதிவுத் துறையின் வருவாய் நடப்பு ஜனவரி மாத முடிவில் ரூபாய் 14,043 கோடியை எட்டியது. கடந்த நிதியாண்டின் மொத்த வரிவசூலான ரூபாய் 13,914 கோடியை ஜனவரி மாதத்திலேயே அடைந்து பதிவுத்துறை வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

காவல் நிலையம் முன் அமர்ந்து கொண்டு ‘ஹூக்கா’ புகைத்து ‘ரீல்’ வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

ஹபூர்: உத்தரபிரதேசத்தில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து  ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டம் ஹபீஸ்பூர் காவல் நிலையத்திற்கு எதிரே அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், போதை வஸ்துவான ‘ஹூக்கா’ புகைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடக தளங்களிலும் ரீல் வீடியோவாக பகிர்ந்துள்ளார். இந்த ரீல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் தேடிவந்தனர். … Read more

`ச்ச… என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம். ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் … Read more

"ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதா?" ஆர்.டி.ஐ-ல் வெளிவந்த தகவல்!

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமையவிருக்கும் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகானாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.  சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது 4,750 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இந்த திட்டத்தில் பாதிப்படைவோம் எனக்கூறி ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உட்பட 13 கிராமத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு வகையில் … Read more

வருடத்தின் முதல் மாதத்திலேயே இத்தனை கோடிகள் ஜி.எஸ்.டி வசூலா? புதிய சாதனை செய்த வசூல்!

“இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 1,55,922 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி இருக்கிறது. இது, இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல்” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 1.68 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. இந்த வரி வசூல், இதுவரை காணாத மாதாந்திர உச்சபட்ச வசூலாகும். இதற்கு அடுத்தபடியாக இந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளது. … Read more