மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாருக்கு ? எத்தனை சதவீதம் வரி ? என்பது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், உரிய ஆவணங்களை சமர்பித்து 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் விலக்கு பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 5 சதவீதம் வரியும், 6 லட்சம் ரூபாலிருந்து 9 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 15 சதவீதம் வரியும், 12 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு 20 சதவீதமும் வரியும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் 93 நாட்களில் இருந்து 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.