சென்னை: எடப்பாடி பழனிசாமி அணியின் செயல்பாட்டுக்கு உரிய நேரத்தில் பதில் தரப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயரோ, கொடியோ இடம்பெறவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.