மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள், கட்டுமான துறைக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளதாக, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறினார்.
அவர் கூறியதாவது:
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்துக்கு, 79 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. இது, புதிதாக வீடு வாங்குவோருக்கு ஊக்கம் தரும். சொத்து விற்பனை வாயிலாக கிடைக்கும் தொகையை, இதே துறையில் மறுமுதலீடு செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை வரவேற்கத்தக்கது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அதிக நிதி கிடைப்பதற்கான திட்டங்கள், கட்டுமான பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளன.
ஏற்கனவே, வீடு வாங்கியவர்கள் இரண்டாவது புதிய வீடு வாங்கும்போது, சில புதிய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; இதற்கான அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement