கனடாவில் மூன்று இடங்களில் கத்தியை காட்டி மிரட்டியதோடு, ஒருவரை காயப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூன்று சம்பவங்கள்
ரொறன்ரோவில் தான் கடந்த 25ஆம் திகதியில் இருந்து 29ஆம் திகதி வரையில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது.
Finch Avenue West and Keele Street areaவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றார்.
இரண்டாவது முறையும் வேறு கடையில் இதே செயலை செய்தார்.
மூன்றாவது முறை கடையில் இருந்த ஊழியரை கத்தியால் கையில் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பியுள்ளார்.
thebizex/thestar
வழக்குப்பதிவு
இந்த நிலையில் குறித்த நபரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அவரின் பெயர் மன்பீர் பாபி உப்பல் (30) என கூறப்பட்டுள்ளது.
தாக்குல் ஆயுதத்தை பயன்படுத்தி கொள்ளையடித்தது, ஆயுதம் கொண்டு தாக்கியது மற்றும் நன்னடத்தை உத்தரவுக்கு இணங்கத் தவறியமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் மன்பீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.