சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு பெற்றுவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்தார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என சந்தேகிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 3 நாளாக நடைபெற்று […]