புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை பாத யாத்திரை காஷ்மீரில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அவரது பாத யாத்திரைக்காக காங்கிரஸ் எம்.பி.க்களில் பலர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் இன்னும் டெல்லி திரும்பவில்லை.
இந்த சூழலில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது முக்கிய விஷயங்களை குறிப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி.க்கள் இல்லாத நிலையில் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவையின் முதல் வரிசையில் தனியாக அமர்ந்திருந்தார்.