இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் திகதி காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
காதலர் தினம்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ம் திகதி காதலை போற்றும் வகையில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த காதலர் தினத்தில் காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டு முத்தங்களையும் அன்பையும் மாறி மாறி பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அத்துடன் அந்த குறிப்பிட்ட நாள் முழுவதுமே ஆட்டமும் பாட்டமுமாய் கோலாகலமாக கொண்டாடப்படும்.
ஆணுறைகள் இலவசம்
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு ஆச்சரியமான பரிசு ஒன்றை தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அதில் வருகின்ற காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் 9 கோடியே 50 லட்சம் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆணுறைகளை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்து கடைகளிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அரசின் இந்த அறிவிப்பானது பாலியல் தொற்று பரவல் மற்றும் இளம் வயதில் கருவுறுதல் போன்ற பிரச்சினைகளில் இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்க ஆணுறைகள் வழங்கப்படுவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.