குடும்பமாக சேர்ந்து பல்வேறு இடங்களில் திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையம், திருவிழாக்களில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வந்தது.
இதனையடுத்து அவர்களை கண்டறிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் குடும்பமாக சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதனையடுத்து திருமலையாம்பாளையத்தை சேர்ந்த திவாகர் (26), கண்ணையா (30), பார்வதி (67) முத்தம்மா (23), முத்துமாரி (26) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் மீது கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 5 பேரிடம் காவல்துறையினர் இருந்து சுமார் 40 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
newstm.in