சீன தூதரக கடிதத் தலைப்பில் வெளியான போலி கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் தொகைகளுக்கு தவணை வழங்க முடியாது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சீனத் தூதரக அதிகாரியொருவர், அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
வெளியான போலி கடிதம்
சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ கடித தலைப்பில் கடந்த 18ம் திகதி இடப்பட்டு இந்த போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
நிலுவைக் கடன்களுக்கு தவணை வழங்கப்பட முடியாது எனவும், கோவிட் காரணமாக தமது நாடும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த தகவல்கள் பொய்யானவை எனவும் அதிகாரபூர்வமான தகவல்களை மட்டும் கருத்திற் கொள்ளுமாறும் சீனத் தூதரகம் மக்களிடம் கோரியுள்ளது.