அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது வழக்கம், ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாவிட்டாலும் துப்புரவு பணிகளை செய்ய ஆட்கள் இருந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை திருமுல்லைவாயல் அடுத்த சோழம்பேடு பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் வகுப்பறை மற்றுதட பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுததியுள்ளது.
அதில் பள்ளி சீருடை அணிந்துள்ள மாணவ மாணவியர் வகுப்பறை நேரங்களில் துடைப்பம் வைத்து சுத்தம் செய்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் பள்ளிகளில் நடைபெறாமல் இருக்க பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM