தமிழக அரசு பள்ளிகளில் துப்புரவு பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவுரைத்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களை துப்புரவு பணிகளில் மற்றும் கழிவறை சுத்தம் செய்ய பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் சென்னை திருமுல்லைவாயில் அடுத்த சோழம்பேடு பகுதியில் இயங்கி வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் சீருடை அணிந்து வகுப்பறை நேரங்களில் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. இன்று காலை தேனியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்யும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.