டெல்லி: 2023ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மாலை 5:00 மணி வரை நிலவரப்படி, ஜனவரி மாத ஜி. எஸ். டி. வசூல் ரூ.1,55,922 கோடி என நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது. […]