கனடாவில், தற்போது மின்னணு கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மின்னணு வடிவில் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ்கள்
இது, காகிதத்தில் அச்சிடப்பட்ட சான்றிதழுக்கு ஒரு மாற்றாகும்.
2023 ஜனவரி 4ஆம் திகதி முதல், நீங்கள் கனேடிய குடியுரிமைக்காக விண்ணப்பித்தாலோ அல்லது குடியுரிமைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தாலோ, குடியுரிமைச் சான்றிதழ் காகித வடிவில் வேண்டுமா அல்லது மின்னணுச்சான்றிதழ் வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம் என பெடரல் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் என்பது, கனேடிய குடியுரிமையை நிரூபிக்கும் ஒரு சான்றிதழ், அது பயண ஆவணம் அல்ல என்பதை கவனத்தில் கொள்க.