புதுடெல்லி,
ஜி-20 நாடுகளின் கூட்டமைப்புக்கான இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டின் ‘ஜி-20’ மாநாடு இந்தியாவில் நடக்கவுள்ளது. செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு முன்பாக இந்தியா முழுவதும் 5 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ‘ஜி-20’ நாடுகளின் ஏராளமான பிரநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ‘ஜி-20’ மாநாட்டை பயன்படுத்தி இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க மத்திய சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சுற்றுலா ஊக்குவிக்கும் வகையில் ‘விசிட் இந்தியா 2023’ என்கிற பிரசாரத்தை மத்திய சுற்றுலா மந்திரி ஜி கிஷன் ரெட்டில் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் அதற்கான ‘லோகா’வையும் அவர் வெளியிட்டார்.