தஞ்சாவூரில் புதுவீடு கட்டும் நீலிமா இசை!
சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான நீலிமா இசை திருமணத்திற்கு பின் பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக மாறிவிட்டார். தவிரவும் சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு கிராமத்தில் சொந்தவீட்டை கட்ட ஆரம்பித்துள்ள நீலிமா, பூமி பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து நீலிமாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.