ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
ஆசிர்வாத் டவர் என்ற அக்கட்டிடத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவிய தீயை நீண்ட போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 10க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.