திருவாரூர்: குருமுதல்வர் திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள் பங்கேற்றனர். தருமபுர ஆதினத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்மந்தரின் குருமுதல்வர் கமலை ஸ்ரீஞானபிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டானம் அமைந்துள்ள திருவாரூரில் ஆலயம் அமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
கமலை ஸ்ரீஞானபிரகாசர் குருமூர்த்த அனுஷ்டானம் ;(சமாதி) திருவாரூர் காட்டுகாரத்தெரு ஓடம்போக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவரது அனுஷ்டானம் சிதலம் அடைந்திருந்த நிலையில் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
தருபுரம் ஆதினத்தை நிறுவிய குரு முதல்வரின் அனுஷ்டானம் கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டுகால யாகசாலை வேள்வி பூஜைகள் ஏராளமான வேதவிற்பன்னர்களைக்கொண்டு இரு தினங்களாக விமர்சையாக நடைபெற்றது. யாகசாலை பூஜையின் நிறைவாக இன்று மகாபூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து யாகசாலையில் இருந்து புனித தீர்த்த கடங்களை சிவாச்சாரியார் சுமந்து கமலா ஸ்ரீஞானப்பிரகாசரின் அனுஷ்டானத்தை வலம்வந்து விமான கலத்திற்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து விமான கலசத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழக்கினை நடத்திவைத்தனர்.
கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது ம்டாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருப்புகளுர் வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டனர். மேலும் இவ்விழாவில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு கமலை ஸ்ரீஞானப்பிரகாசரை வழிபட்டனர்.