ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில்
நாம் தமிழர்
கட்சி தனித்து போட்டியிடுவதற்காக அறிவித்திருந்தது. அதனை தோடர்ந்து, கடந்த 29
ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்திலேயே கடுமையான சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என்று எதிர்க்கட்சிகள் நீண்ட நாட்களாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், அரசியல் களத்தில் பாஜக,
காங்கிரஸ்
ஆகிய இரண்டு தேசிய கட்சிகளையும் விமர்சித்து வரும் சீமான், நாட்டை முதலாளிகளுக்கு அடமானம் வைத்ததே பாஜக அரசுதான் என்று கடுமையான குற்றசாட்டை வைத்து வருகிறார். மத்திய பாஜகவின் ஒரு திட்டத்தையும் சீமான் ஆதரரித்து பேசியதில்லை. மாறாக, பாஜக எங்களின் அரசியல் எதிரி என்றும் காங்கிரஸ் எங்களின் பரம துரோகி என்றும் சீமான் சாடி வருகிறார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மேனகாவின் கணவர் பாஜகவின் நிர்வாகி என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. திமுக அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்களே அத்தகைய தகவலை பரப்பியுள்ளனர். அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் மேனகாவின் கணவர் நவநீதன், பாஜகவின் பணிக்குழு பொறுப்பாளர் என்றும், அவர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி நடத்தி வரும் பப்ளிக் பள்ளியில் கிரிக்கெட் கோச்சராக பணிபுரிந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள மேனகாவின் கணவர் நவநீதன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது; ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கட்சியின் பொறுப்பாளர் கார்த்தியையும் அவரது அண்ணனையும் அவர்களது சொந்த மாமாவே குத்தி கொலை செய்துள்ளார். நாங்கள் இரண்டு நாட்களாக பிணவறைக்கு முன்பு கண்ணீருடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் என்னை பாஜக நிர்வாகி என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர். தொலைக்காட்சியில் இருந்து எனக்கு அழைப்புகள் வருகின்றன. நான் இதை பார்ப்பேனா அல்லது பத்திரிகைகளுக்கு பதில் சொல்வேனா?
நான் பாஜக நிர்வாகியின் பள்ளியில் வேலை பார்த்தது உண்மைதான். அந்த பள்ளியில் இருந்து ஒரு வருடத்துக்கு முன்பே நின்று இப்போது வேறொரு பள்ளியில் வேலை பார்க்கிறேன். அந்த பள்ளி முன்னாள் காங்கிரஸ் எம்பியின் பள்ளி, ஆகையால் நான் காங்கிரஸ்காரரா ஆகிவிடுவேனா? பிழைப்புக்கு எங்கையாவது வேலை பார்த்துதான் ஆக வேண்டும். எதற்கெடுத்தாலும் பிஜேபி பி டீம் பிஜேபி பி டீம் என்று எங்கள் மீது குற்றம் சுமதி வாக்காளர்களை குழைப்பாமல் களத்தில் நேருக்கு நேர் நின்று மோத கற்றுக்கொள்ளுங்கள்” என்று நவநீதன் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.