நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 63 பந்துகளில் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 22 பந்தில் 3 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு திணறினர். அந்த அணியின் டேரில் மிட்சல் மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.
சான்ட்னர் 13 எடுத்து ஆட்டமிழந்தார். மற்றபடி அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்தனர். மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனையடுத்து நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
newstm.in