மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிநீர் வசதிக்கான ஜல் ஜீவன் திட்டத்திற்கு கடந்த முறை 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த நிதியான்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2023 – 24ஆம் ஆண்டிற்கு 79 ஆயிரத்து 590 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.