பட்ஜெட் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க பாஜக சார்பில் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்தக் குழுவினர் நாடு முழுவதும் நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் மக்களிடம் பட்ஜெட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும், மக்களின் கருத்துகளையும் இக்குழு கேட்டறியும்.