ஒன்றிய அரசின் 2023 – 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
அவரது உரையில் அவர், “ உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரம் இந்தியா. 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் இந்தியாவை உலக நாடுகள் ஒளிரும் நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளன” என்று கூறினார்.
ஒன்றிய அரசின் அமைச்சர் நாட்டை இவ்வாறு புகழ்ந்து கூறுவது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும் அவர் குறிப்பிட்ட ஒளிரும் நட்சத்திரம் என்ற வார்த்தை இன்றைய தினத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள்: அடடே தமிழ்நாட்டுக்கு இவ்வளவு பெருமையா?
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நம் மூதாதையர்கள் கற்கால மனிதர்களாக இருந்த போது வானில் கண்ட பச்சை வால் நட்சத்திரம் இன்று மீண்டும் பூமிக்கு அருகில் வந்துள்ளது. கற்கால மனிதர்கள் பார்த்த அதே நட்சத்திரத்தை இன்று நாமும் பார்க்கிறோம்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமே இந்த பச்சை வால் நட்சத்திரம் சில மாதங்களில் பூமிக்கு அருகில் வரும் என்று அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். பூமியிலிருந்து 4.2 கோடி கி.மீ தொலைவிற்கு வந்துள்ள C / 2022 E3 (ZTF) என்ற பெயர் கொண்ட இந்த வால் நட்சத்திரத்தை இன்று தமிழ்நாட்டு மக்களும் பார்த்து மகிழ்ந்துள்ளனர். கொடைக்கானல் பகுதியில் வானில் இந்த நட்சத்திரம் தென்பட்டுள்ளது.
தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம். நகரங்களில் ஒளி மாசு அதிகமாக இருப்பதால் வெறும் கண்களால் பார்ப்பது கொஞ்சம் கடினம். ஆனால், இருட்டான வானம் உள்ள பகுதிகளில் கொஞ்சம் பொறுமையாக வானத்தைக் கூர்ந்து பார்த்தால் இந்த பச்சை வால் நட்சத்திரம் வெறும் கண்களுக்கு புலப்படும்.
ஈரோடு கிழக்கு – எகிறி அடித்த எடப்பாடி: அவ்வளவு தானா ஓபிஎஸ் மவுசு?
50,000 ஆண்டுகளுக்குப் பின்னர் அரிய நிகழ்வு ஒன்று நிகழும் தருணத்தில் இந்திய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அவர் கூறியபடி ஒளிரும் நட்சத்திரமாக நாடு மாறுமா அல்லது கற்காலத்தை நினைவுபடுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.