திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
