வேலூர்: பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டுவர காரணம் என்ன? என்பது குறித்து, வேலூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கினார். “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டம் தொடங்கி வைக்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக, ரயில் மூலம் இன்று காலை வேலூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை இல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் பயணம் மேற்கொண்டுள்ளார். […]