சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக சுவிஸ் அரசியல் கட்சி ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
பிரித்தானியாவின் கொள்கையைப் பின்பற்றவேண்டும்
சுவிட்சர்லாந்தில் தற்போதைய புலம்பெயர்தல் கட்டுப்பாட்டு அமைப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, அரசு எல்லைக்கு அருகில் புகலிட மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
அத்துடன், பிரித்தானியாவின் மாதிரியைப் பின்பற்றி, புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி அங்கு புகலிடக்கோரிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும் என்றும் அக்கட்சி கோரியுள்ளது.
குற்றம் செய்த சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள், முறைப்படி நாடுகடத்தப்படுவதில்லை என்றும் அக்கட்சி குறைகூறியுள்ளது.