புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளாா். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும். இந்த பட்ஜெட் காகிதமில்லா […]