மாமல்லபுரத்தை கண்டு ரசித்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்!

முதன்முறையாக இந்தியா ஜி-20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பினை ஏற்றுள்ளது. இதனை தொடர்ந்து, ஜி 20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷியா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி 20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுளளன.

அதன் அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் 31-ந்தேதி மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர் தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம் காவடி ஆட்டம் உள்ளிட்ட,  தமிழக கலாச்சாரத்துடன் சிறப்பான வரவேற்பு சுற்றுலாத்துறை சார்பாக அளிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வெங்கல சிலைகள் தஞ்சாவூர் ‌கலை தட்டு மரச் சிற்பம் கற் சிற்பம் உள்ளிட்ட அனைத்தும் கலைகளையும் கலைஞர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.