மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டுவிழாவில் தன் இளைய மகன் ஹரியும், மருமகள் மேகனும் பங்கேற்றேயாகவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி தரப்பின் நிலை
மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா, வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளது.
முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை ஹரி, மேகன் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மன்னரின் தீர்மானம்
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, அவர் தனது இளைய மகன் ஹரியையும், மருமகள் மேகனையும் தனது முடிசூட்டு விழாவுக்கு அழைக்கவே விரும்புவதாக மன்னருக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், அதுதான் சரியானது என்றும், அது சமாதானத்துக்கு வழிவகுக்கும் என்றும் மன்னர் கருதுகிறாராம்.
மன்னர் மன்னிக்கும் குணம் கொண்டவர் என்று கூறும் மன்னருக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் உள்ள ஒருவர், அவர் பழையவைகளை கடந்துசெல்லவே விரும்புவதாக தெரிவிக்கிறார்.
அதே நேரத்தில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தைப் பயன்படுத்தி ஹரி ஸ்டண்ட் அடிக்கக்கூடும் என்றும், அதனால் மன்னரின் முடிசூட்டு விழாவின் முக்கியத்துவம் பாதிக்கப்படலாம் என்றும் இளவரசர் வில்லியம் அஞ்சுவதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.