நீலகிரி மாவட்டம் யானை வளர்ப்பு முகாம் பின்பகுதியில், புலி தாக்கி பழங்குடியினப் பெண் உயிரிழந்ததை அடுத்து, புலியை பிடிக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக, தெப்பக்காடு வன எல்லைக்குட்பட்ட பகுதிகளில், புலி தாக்கி நான்குக்கும் மேற்பட்ட பசு மாடுகள் பலியான நிலையில், புதன்கிழமை அதிகாலை வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற மாரி என்ற பெண் புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது