தம்தாரி: சட்டீஸ்கரில் ரூ. 5,000 கடன் ெகாடுத்ததற்காக சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டம் குருட் பகுதியைச் சேர்ந்த ெபண் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரர் சுதர்சன் நாகர்ச்சியிடம் (60) கடந்தாண்டு அக்டோபர் மாதம் குடும்ப தேவைக்காக ரூ.5,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு சுதர்சன் நாகர்ச்சி, அந்த பெண்ணின் 17 வயது மைனர் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வரும்படி வற்புறுத்தி உள்ளார். கடன் தேவைக்காக தனது மகளை சுதர்சன் நாகர்ச்சியின் வீட்டிற்கு அந்தப் பெண் அழைத்து சென்றார்.
அடிக்கடி வீட்டிற்கு வந்து போகும்படியும் சிறுமியிடம் சுதர்சன் நாகர்ச்சி கேட்டுக் கொண்டார். சிறுமியின் தாய் கேட்ட 5,000 ரூபாயையும் கடனாக கொடுத்தார். அதன்பின் அவரது வீட்டிற்கு சென்ற சிறுமியை கட்டாயப்படுத்தி, சுதர்சன் நாகர்ச்சி பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோல் அடிக்கடி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதையறிந்த அந்த சிறுமியின் தாய் கண்டித்துள்ளார். அவருக்கு சுதர்சன் நாகர்ச்சி கொலை மிரட்டல் விடுத்தார். இவ்வாறாக மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன.
அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்து பார்க்கையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மகளும், தாயும், உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சுதர்சன் நாகர்ச்சியின் மீது போக்சோ சட்டத்தின் பிரிவுகள் கீழ் கைது செய்தனர். கர்ப்பிணியான அந்த சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ரூ. 5,000 கடனுக்காக சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.