இளவரசி டயானா விபத்தில் சிக்கிய போது அவர் பயணித்த கார் வேகமாக சென்றதற்கான உண்மையான காரணத்தை இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.
டயானா
தனது நினைவு குறிப்பான Spare-ல் பலரும் அறியாத முக்கிய தகவல்களை ஹரி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது தாயார் டயானா இறப்பு தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தனது நெருங்கிய நண்பரான ஹென்னர்ஸின் மரணம், இளவரசி டயானாவை இழந்த காலத்திற்கு தன்னை எப்படி அழைத்துச் சென்றது என்பதை ஹரி நினைவு கூர்ந்தார்.
AP/nypost/Getty
சீட் பெல்ட்
ஹென்னர்ஸ் சிக்கிய விபத்து குறித்த விடயங்களை கேட்டறிந்தேன், அவர்கள் காரில் வெகுதூரம் செல்லவில்லை.
குறுகிய தூரமே சென்றாலும் சீட் பெல்ட் அணிவதை பற்றி கவலைப்படவில்லை என் தாய் டயானாவை போலவே.
அதேநேரம் என் தாய் போல் ஹென்னர்ஸ் அவ்வளவு வேகமாக காரில் செல்லவில்லை, ஏனெனின்றால் அவர் யாராலும் துரத்தப்படவில்லை.
அதே நேரம் கார் நேராக பழைய மரத்தின் மீது சென்று மோதியது என தெரிவித்துள்ளார்.