ஐதராபாத்: படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார் கமல்ஹாசன்.கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்துள்ளது. இதில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கிறார்கள். பைனான்ஸ் பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த படத்தை சென்னையில் படமாக்கி வந்தார் இயக்குனர் ஷங்கர்.
இந்நிலையில் படத்தில் கமல்ஹாசனின் பெயர் சேனாதிபதி. கதைப்படி சேனாதிபதி கேரக்டரின் இளமைக்கால காட்சிகளை காட்டுவதற்கான படப்பிடிப்பு திருப்பதி அருகிலுள்ள வனப்பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. இதையடுத்து சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கினார் கமல்ஹாசன். அங்கிருந்து கார் மூலம் அவர் வனப்பகுதிக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.