100 பேர்களை காவு வாங்கிய கொடூர சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி


பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலானது காவல்துறைக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என கூறப்படுகிறது.

பலி எண்ணிக்கை 100

பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள மசூதியிலேயே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பேர்களை காவு வாங்கிய கொடூர சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Pakistan Mosque Suicide Blast Revenge Attack

@AFP

பெஷவாரில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் சம்பவத்தின் போது 300 முதல் 400 பொலிசார் தொழுகைக்காக திரண்டிருந்தனர்.
அப்போது தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டை வெடிக்க செய்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில், ஒரு முழு சுவர் மற்றும் கூரையின் பெரும்பகுதி வெடித்துச் சிதறியது, அதிகாரிகள் பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
இந்த நிலையில், காவல்துறையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக நகர காவல்துறை தலைவர் முஹம்மது இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

100 பேர்களை காவு வாங்கிய கொடூர சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Pakistan Mosque Suicide Blast Revenge Attack

@AP

தீவிரவாத குழுக்களுக்கு எதிராக

மேலும், தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதனாலையே தங்கள் மீது இலக்கு வைக்கப்பட்டதாகவும் இஜாஸ் கான் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, காவல் துறையை தளர்ச்சியடையச் செய்வதே இதன் நோக்கம் எனவும் இஜாஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2021ல் தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதிலிருந்து ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பெஷாவர் அருகே உள்ள பகுதிகளில் அடிக்கடி பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைக் குறிவைக்கும் தீவிரவாத நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.

100 பேர்களை காவு வாங்கிய கொடூர சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Pakistan Mosque Suicide Blast Revenge Attack

@AP

தொடர்புடைய தாக்குதல்களை பொதுவாக பாகிஸ்தான் தலிபான்கள் அல்லது பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் குழுக்கள் பொறுப்பேற்கும்.
தற்போதைய இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்கள் ஆதரவு குழுவாக இருக்க வாய்ப்பு என அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.