மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள நவீன வசதிகளை பெற்ற XUV400 EV காரின் ரேஞ்சு அதிகபட்சமாக 456 கிமீ ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 15.99 லட்சம் விலையில் துவங்கி ரூ.18.99 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் 10,000 முன்பதிவுகளை குவித்துள்ளது. XUV400 காத்திருப்பு காலம் தற்போது ஏழு மாதங்களாக அதிகரித்துள்ளது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
மஹிந்திரா XUV400 EV
முதல் 5000 கார்களுக்கு மட்டும் அறிமுக ஆரம்ப விலை என்பதனால் காரின் விலை கணிசமாக உயரக்கூடும். எக்ஸ்யூவி 400 காரில் 34.5kWh மற்றும் 39.4kWh என இரு விதமான பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
XUV400 எலெக்ட்ரிக் காரில் இரண்டு பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. 34.5kWh மற்றும் 39.4kWh என இரண்டும் 150hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. XUV400 ஆனது 8.3 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி400 இவி அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ ஆக உள்ள நிலையில் மூன்று டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. அவை Fun, Fast மற்றும் Fearless ஆகும். ஸ்டீயரிங் மற்றும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸை உடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.
குறைந்த சக்தி கொண்ட 34.5kWh பேட்டரி பெற்ற XUV400 கார் 375 கிமீ ரேஞ்சு கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, 39.4kWh பேட்டரியுடன் இந்திய ஓட்டுநர் சான்றிதழ்படி (MIDC- Indian driving cycle) ஒருமுறை சார்ஜ் செய்தால் 456கிமீ ரேசஞ்சை பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
XUV400 மாடலில் மூன்று விதமான வேரியண்டுகள் EC (3.3kW), EC (7.2kW) மற்றும் EL (7.2kW). 50 நிமிடங்களுக்குள் 0-80 சதவீதம் வரை சார்ஜினை 50kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பெறக்கூடும். இது தவிர, மஹிந்திரா இரண்டு சார்ஜிங் விருப்பங்களை வழங்குகிறது. அவை 3.3kW AC சார்ஜர் மற்றும் 7.2kW AC சார்ஜர்.
Mahindra XUV400 EV Prices:
Variant | Price |
---|---|
XUV400 EC 34.5 kWh 3.3 kW Charger | Rs. 15.99 Lakhs |
XUV400 EC 34.5 kWh 7.2 kW Charger | Rs. 16.49 Lakhs |
XUV400 EL 39.4 kWh 7.2 kW Charger | Rs. 18.99 Lakhs |