கோவை மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த 29 வயது உடைய வாலிபர் ஒருவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள, அவரது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பொழுது தாய் மாமன் மகளான 16 வயதுடைய 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபரின் தொந்தரவு தாங்க முடியாமல் மாணவி இதுகுறித்து தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.