Budget 2023 – காங்கிரஸை ரகசியமாக சீண்டிய நிர்மலா: யாருங்க அந்த பழைய வண்டி?

ஒன்றிய அரசின் 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு, 7.5 சதவீத வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம், பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 79 ஆயிரம் ரூபாய் கோடி நிதி, செல்போன், டிவி உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியும் குறைப்பு என பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

பட்ஜெட் உரையில் நிர்மலா சிதாராமன் வாகன ஸ்கிராப் பாலிசி திட்டம் குறித்து பேசினார். 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலேயே இது குறித்து பேசியிருந்தார். அந்த வகையில் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவையாக இருந்தால் அவற்றைப் புதுப்பிக்க முடியாது. இந்த அறிவிப்பானது அனைத்து அரசுத் துறை வாகனங்களுக்கும் பொருந்தும்.

ஈரோடு கிழக்கு – எகிறி அடித்த எடப்பாடி: அவ்வளவு தானா ஓபிஎஸ் மவுசு?

ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் மத்திய அரசின் “வாகன ஸ்கிராப் பாலிசி திட்டம்” குறித்து இன்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி பேசினார்.

“பழைய அரசு வாகனங்களை மாற்றும் முடிவு இந்தியப் பொருளாதாரத்துக்கு ஏற்றத்தை அளிக்கும். இதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாகும்” என்றார்.

இதைக் கூறும் போது, “ரீ ப்ளேசிங் தி ஓல்டு பொலிடிக்கல் வெகிக்கிள்ஸ்…. சாரி ஓல்டு பொல்யூட்டட் வெகிக்கிள்ஸ்..” என்று கூற பாஜக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை உருவானது.

நா தவறி கூறியதாக சாரி சொன்ன நிர்மலா சீதாராமன்,
காங்கிரஸ்
கட்சியை விமர்சிக்கும் விதமாகவே ‘ரீ ப்ளேசிங் தி ஓல்டு பொலிடிக்கல்’ என்ற சொற்றொடரை பயன்படுத்தினார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.