டான்ஸர் ரமேஷ் மரணம் தொடர்பாக அவரது முதல் மனைவி சித்ரா பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
டான்ஸர் ரமேஷ் மரணம்பிரபல நடன கலைஞரான டான்ஸர் ரமேஷ் கடந்த வெள்ளிக் கிழமை தனது பிறந்த நாளில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. டான்ஸர் ரமேஷுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சித்ராவுக்கும் ரமேஷுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்குமே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் டான்ஸர் ரமேஷ், இன்பவள்ளி என்பவருடன் சென்னை புளியந்தோப்பில் உள்ள கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்துள்ளார்.
Poorna Baby Shower: நடிகை பூர்ணா கர்ப்பம்… கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு!
சந்தேக மரணம்இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு டான்ஸர் ரமேஷ் அடுக்குமாடி குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத ரமேஷின் முதல் மனைவி சித்ரா, ரமேஷ் இன்பவள்ளியால் கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து ரமேஷ் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக இன்பவள்ளியிடம் விசாரணை நடத்தினர்.
Vanitha Vijayakumar: சேலையில் ஹாட்னஸ் காட்டும் வனிதா அக்கா… ஒவ்வொன்னும் ஒரு ரகம்!
அடிக்காதம்மா தாங்க முடியலஅப்போது டான்ஸர் ரமேஷ் தன்னிடம் குடிக்க பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்பவள்ளி, டான்ஸர் ரமேஷை கம்பால சரமாரியாக தாக்குவதும், அதனால் வலி தாங்க முடியாமல், அடிக்காதம்மா வலி தாங்க முடியல என ரமேஷ் கதறுவதுமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Naresh Babu: கொன்னுடுவேன்னு மிரட்டுறா.. 4வது திருமணம் செய்யும் நடிகர் 3வது மனைவி மீது பரபர புகார்!
என்கிட்ட வீடியோ இருக்குஇந்நிலையில் டான்ஸர் ரமேஷின் மனைவி சித்ரா, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தனது கணவர் ரமேஷின் மரணம் முழுக்க முழுக்க கொலைதான் என்று கூறியுள்ள சித்ரா, தன்னிடம் ஒரு வீடியோ உள்ளது என்றும் அந்த வீடியோ 3 வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். தனது கணவரை அடித்து துன்புறுத்தி இன்பவள்ளியே அந்த வீடியோவை தனக்கு அனுப்பி வைத்தார் என்றும் அப்போதே தனது கணவருக்கு ஏதோ ஆகப் போகிறது, அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற பயத்துடனே தான் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சித்ரா. வனிதாவின் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம்?
அந்த ஒரு மணிநேரம் எங்கே போன?தன்னுடைய கணவரை அடித்தால் தன்னால் தாங்க முடியுமா என்று வேதனைப்பட்டுள்ள சித்ரா, தனது கணவர் ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் அந்த எண்ணத்தை அவருக்கு தூண்டி விட்டவர் இன்பவள்ளிதான் என்றும் தெரிவித்துள்ளார். ரமேஷிடம் தான் சண்டை போட்டதே இல்லை என்று கூறும் இன்பவள்ளி, எதற்காக அவரை கதற கதற அடித்து துன்புறுத்தினார் என்றும் 4 மணிக்கு அவர் கீழே குதித்ததாக சொல்லும் அவர் 5 மணிக்குதான் பார்த்ததாக சொல்கிறார், அந்த ஒரு மணிநேரம் எங்கே சென்றார் என்றும் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளார். Thalapathy 67: லாக்டவுனில் ரெடியான தளபதி 67 ஸ்க்ரீப்ட்.. டீசரால் இம்ப்ரஸான கமல்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
கடைசியாக முகத்தை கூட பார்க்கலரமேஷோடு அன்பாக வாழ்ந்ததாக கூறும் இன்பவள்ளி கடைசியாக அவருடைய முகத்தையாவது பார்த்திருக்க வேண்டும். அவர் கிழே விழுந்து கிடந்த போது கூட இன்பவள்ளி அவரை பார்க்க வரவில்லை. கடைசியாக ரமேஷின் முகத்தை கூட பார்க்க வரவில்லை என்றும் கூறியுள்ளார் சித்ரா. மேலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் தனது கணவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
Vijayakanth SAC meet: திடீரென விஜயகாந்தை சந்தித்த விஜய்யின் அப்பா… கைகளை பிடித்து முத்தம் கொடுத்து உருக்கம்!
டான்ஸர் ரமேஷ் நடனம் View this post on Instagram A post shared by ���������� �������� ���������� (@_dance_jodi_dance_)
Dancer Ramesh