Flagship போன்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது Apple, Google மற்றும் Samsung ஆகிய நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்னதாக Flagship Killer என்ற பெயரில் Oneplus நிறுவனம் அதன் போன்களை வெளியிட்டு
Flagship போன்களின்
வரிசையில் இடம்பெற்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து Samsung, Google மற்றும் Apple ஆகிய நிறுவனகளையே ஓரம் கட்டிவிட்டது.
இந்த நிறுவனத்தின் அடுத்த
Flagship Killer மாடலாக
புதிய Oneplus 11 Series வரும் பிப்ரவரி 7 அன்று வெளியாகிறது. இந்த போனில் இருக்கும் சில முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய அட்டகாசமான கேமரா வசதி
Oneplus நிறுவனம் இந்த புதிய 11 சீரிஸ் போன்களுக்காக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த Hasselblad என்ற கேமரா நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த இணைப்பின் முதல் போன் இந்த Oneplus 11 series ஆகும்.
இதில் 13 சேனல் MultiSpectral சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா வசதி இடம்பெறும். இதில் IMX 890 50MP மெயின் கேமரா, IMX 709 32 MP போர்ட்ரைட் கேமரா, IMX 581 48MP அல்ட்ரா வைட் கேமரா போன்ற வசதிகள் உள்ளன. இதன் முன்பக்கம் 16MP செல்பி கேமரா உள்ளது.
புதிய Snapdragon Processor
இந்த போன் முதல் முறையாக சமீபத்திய Qualcomm Snapdragon 8 Gen 2 SOC சிப் மற்றும் processor கொண்டிருக்கும். இதன் CPU மற்றும் GPU வேகம் இப்போது 35% மற்றும் 25% அதிகரித்துள்ளது. வேகம் மற்றும் Multitasking வசதிகள் இதில் இருக்கும்.
புதிய டிஸ்பிலே மற்றும் டிசைன்
இதன் டிசைன் பார்ப்பதற்கே அட்டகாசமாக உள்ளது. குறிப்பாக அந்த கேமரா போனின் சேசிஸ் உடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. இது ஒரு கிளாஸ்ஸி பினிஷ் கொண்டுள்ளது. இதில் 6.7 இன்ச் Quad HD+ 120HZ AMOLED ஸ்க்ரீன் உள்ளது. இதனுடன் 5000mAh பேட்டரி மற்றும் 100W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
அதிரடி பீச்சர்கள்
இந்த போன் 16GB RAM இருப்பதால் கேமிங் என்பது அசால்டாக செய்யலாம். இதனுடன் நமக்கு Dolby Vision மற்றும் Dolby Atmos சவுண்ட் வசதி கிடைக்கிறது. Oxygen OS மூலமாகவும் சில தனிப்பட்ட வசதிகளை Oneplus வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் சேர்த்து இந்த போனை சாம்சங், கூகுள் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு நிகரான பிரீமியம் அனுபவத்தை தரும் என்று தெரிகிறது.
எப்போ லான்ச்?
இந்த போன் Oneplus நிறுவனத்தின் Cloud 11 நிகழ்ச்சியில் வெளியிடப்படும். இது டெல்லியில் வரும் பிப்ரவரி 7 அன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும். இந்த போனுடன் Oneplus நிறுவனம் அதன் Oneplus Buds Pro 2 earbuds மற்றும் Oneplus TV 65 Q2 Pro ஆகிய இரு எலக்ட்ரானிக் கருவிகளையும் வெளியிடுகிறது. இதன் விலை 60 முதல் 65 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்