Samantha: தளபதி, ஆண்டவரை முந்திய சமந்தா: ஏன், என்னாச்சு?

Citadel, Samantha: ட்விட்டரில் சமந்தாவின் பெயர் டிரெண்டாவதை பார்த்த ரசிகர்கள், சம்முவுக்கு என்னாச்சு என தேடிப் பார்த்து நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வருவதால் #Thalapathy67Update என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் உலக நாயகன் கமல் ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரில் சென்றதால் #Indian2 ஹேஷ்டேகும் டிரெண்டாகியுள்ளது. ஆனால் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளையும் சமந்தா முந்திக் கொண்டுவிட்டார்.

​Thalapathy 67 Update: மண்ட மேலே இருக்கிற கொண்டய மறந்துட்டீங்களே லோகேஷ்
சமந்தாசமந்தாவின் பெயர் டிரெண்டாவதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் பதறிவிட்டார்கள். சமந்தாவுக்கு உடல்நலம் சரியில்லையே. இந்த நேரத்தில் டிரெண்டாகிறது என்றால் ஏதாவது பிரச்சனையா என்று கலக்கம் அடைந்தார்கள். அதன் பிறகே பிரச்சனை எதுவும் இல்லை சிடாடல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் சமந்தா என்பதை அறிந்து நிம்மதி அடைந்துள்ளனர்.
ராஜ்
ஷூட்டிங்தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் சிடாடல் வெப்தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். வெப் தொடரில் வருண் தவானுக்கும், சமந்தாவுக்கும் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உண்டாம். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை அழைத்து வருகிறார்களாம். உடம்புக்கு முடியாத பிள்ளை, சம்முவை பத்திரமாக பார்த்துக்கோங்க என இயக்குநர்களிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயோசிடிஸ்மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா, சிடாடல் வெப்தொடரில் இருந்து விலகிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று சமந்தாவின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அறிவித்தபடி வெப்தொடரின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் சமந்தா.
வருண் தவான்சிடாடல் வெப்தொடரின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. அடுத்தாக வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஷூட் செய்கிறார்களாம். அங்கு ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த தொடரில் வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடிக்கிறார்களாம். சமந்தாவும், வருண் தவானும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
விமர்சனம்முன்னதாக ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரில் நடித்தார் சமந்தா. அந்த தொடரை பார்த்தவர்கள் சமந்தாவை விளாசினார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் ராஜ் மற்றும் டி.கே.வுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். சமந்தாவை அவரின் வேலைக்காக விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்கிறார்கள் ரசிகர்கள். உடம்புக்கு முடியாத நிலையில் நம்பிக்கையுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சமந்தாவை பலரும் பாராட்டுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.