லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் வெளியாகி இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. சில மாதங்களாக இந்தப்படத்தின் அப்டேட்க்காக தவமிருந்த ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அப்டேட்டை வாரி வழங்கியுள்ளனர் ‘தளபதி 67’ படக்குழுவினர். இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.
‘தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து பிரபல நடிகர் சஞ்சய் தத் கூறும்போது, விஜய் 67 படத்தின் ஒன்லைனைக் கேட்டபோதே நான் படத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதனை தொடர்ந்து சாண்டி மாஸ்டர் கூறும்போது, ‘ எனது விருப்பத்துக்குரிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க இருப்பது ஒரு வித்தியாசமான உணர்வு. புதிய அனுபவம் கிடைக்கும். எங்கள் தளபதி விஜய் உடன் படத்தில் நடிப்பதை நடிக்க இருப்பதை அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியாமல் நான் தவித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு. இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என்மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
‘தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து நடிகை பிரியா ஆனந்த் கூறும் போது, “தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்” என தெரிவித்துள்ளார். மேலும், ‘தளபதி 67’ படத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரு அற்புதமான கேப்டனால் வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன் என ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிப்பது குறித்து பிரபல இயக்குனர் கெளதம் மேனன் கூறுகையில், இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள் சேர்ந்து நிற்கிறேன் என தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான், ‘யானும் இணைந்தேன் தளபதி67 -ல். லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே’ என்று தெரிவித்துள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளதால் ‘தளபதி 67’ படம் குறித்து உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.