Sanjay Dutt: தளபதி 67 படம் தொடர்பாக வெளியான அறிவிப்புகளை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கவலையில் இருக்கிறார்கள்.
தளபதி 67வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 67. அந்த படம் தொடர்பாக தினமும் அப்பேட் வெளியிடுகிறார்கள். நேற்று முன்தினம் வெளியான அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள். இதையடுத்து நேற்று மாலை வெளியான அப்டேட்டுகளை பார்த்த ரசிகர்களுக்கு கவலை வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
அறிவிப்பு
சஞ்சய் தத்தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக இவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்று ஒரு பட்டியல் வலம் வந்தது. இத்தனை வில்லன்களா, இருக்காது என நினைத்தார்கள் ரசிகர்கள். இந்நிலையில் தான் அந்த வில்லன் பட்டியல் உண்மை என்பது தெரிய வந்தது. தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர் கவுதம் மேனன், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்டேட்
விஜய்தளபதிக்கு இத்தனை வில்லன்கள் இருப்பது சரியில்லையே. லோகேஷ் கனகராஜ் என்ன நினைக்கிறார் என்பது புரியவில்லை. இத்தனை பேருக்கு சீன் கொடுத்தால் விஜய்யின் ஸ்க்ரீன் டைம் குறைந்துவிடுமே. போகிற போக்கை பார்த்தால் மாஸ்டரில் விஜய் சேதுபதி செய்ததை தான் இந்த வில்லன் பட்டாளமும் செய்யும் போன்றே என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
லோகேஷ்எத்தனை வில்லன்கள் வந்தாலும் சமாளிக்கும் திறமை கொண்டவர் தான் தளபதி. ஆனால் தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஹீரோவுக்காக வில்லன்களை டம்மியாக்க மாட்டார் அவர். வில்லன்களை அவர்களுக்கே உரிய கெத்துடன் காட்டுவார். பிரச்சனையே அது தான். லோகேஷ் படத்தில் வரும் வில்லன்களை மக்களுக்கு ரொம்ப பிடித்துவிடுகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
ப்ரியா ஆனந்த்லோகேஷ் படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இல்லை. இந்நிலையில் தான் த்ரிஷாவை நடிக்க வைக்கிறார். ஹீரோயினுக்கே வேலை இல்லாதபோது ப்ரியா ஆனந்த் என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. அப்டேட் விட்டு நல்லா குழப்பிவிட்டார் லோகேஷ் கனகராஜ். படம் வந்தால் தான் தெரியும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ப்ரியா
காஷ்மீர்தளபதி 67 படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் நிற்கும் புகைப்படமும், வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் விஜய்யின் ஹேர்ஸ்டைல் சூப்பராக இருப்பதாக தளபதி ரசிகர்கள் தெரிவித்தனர். Thalapathy 67, Vijay: கெளம்பிட்டாருய்யா விஜய்ணா கெளம்பிட்டாருய்யா: வீடியோ பார்த்தீங்களா?