லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் தற்போது தளபதி 67 படம் உருவாகி வருகின்றது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. என்னதான் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றாலும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகவில்லை என்ற விமர்சனம் இருந்தது.
இதையடுத்து தற்போது தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க கேங்ஸ்டராக நடிப்பதாகவும், இப்படம் பாடல்கள் இல்லாமல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
Rajini: ஜெயிலர் படத்தில் ஹைலைட்டாக அமைந்த அந்த காட்சி..நெல்சனை பாராட்டி தள்ளிய சூப்பர்ஸ்டார்..!
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
அதன்படி இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலி கான் ஆகியோர் நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டிலை லோகேஷ் முடிவு செய்ததாக தகவல்கள் வருகின்றன.
அந்த டைட்டில் செம மாஸாக இருக்கும் என்றும், ப்ரோமோவோடு டைட்டிலையும் சேர்த்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. இதையடுத்து ரசிகர்கள் டைட்டிலை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.