விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார். வம்சியின் இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷுடன் இணைகிறார் தளபதி விஜய். இப்படத்தின் பூஜை டிசம்பர் மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
Thalapathy 67: விஜய்யால் தான் நான் மாறினேன்..வெளிப்படையாக பேசிய SAC ..!
இந்நிலையில் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகி வருவதாக வந்த தகவலினால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக சஞ்சய் தத் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கடைசியாக KGF இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார் சஞ்சய் தத்.
இதைத்தொடர்ந்து தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையடுத்து இப்படத்தில் நடிப்பதற்காக சஞ்சய் தத் பத்து கோடி சம்பளமாக வங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. கடைசியாக சஞ்சய் தத் நடித்த KGF 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் தளபதி 67 படத்திற்கு அவருக்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.