நடிகை த்ரிஷா ஷேர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.
த்ரிஷா1999ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோயினாக உச்சம் தொட்டார். தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்கள் முதல் தற்போதைய இளம் நடிகர்கள் வரை பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா.
இந்த ஸ்பெஷாலிட்டி த்ரிஷாவுக்கு மட்டும்தான் உண்டு!
குந்தவைகடந்த ஆண்டில் த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன், ராங்கி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இரண்டு படங்களுமே த்ரிஷாவுக்கு பாராட்டையும் புகழையும் பெற்று தந்தது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் த்ரிஷா. அந்தப் படத்திற்கு பிறகுதான் த்ரிஷாவின் சினிமா மார்க்கெட் மளமளவென உயர ஆரம்பித்தது. AK 62: அடேங்கப்பா… அஜித்துக்கு பெத்த சம்பளம்… ஏகே 62 பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
தளபதி 67அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார் த்ரிஷா. 40 வயதை நெருங்கும் த்ரிஷாவுக்கு தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் 67வது படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் த்ரிஷா. தளபதி 67 என குறிப்பிடப்படும் விஜய்யின் இப்படத்தில் த்ரஷா நடிக்க உள்ளது ஏற்கனவே தெரிந்திருந்த போதும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Azeem:பல முறை போன் செய்தும் விக்ரமன் எடுத்து பேசல… வருத்தப்பட்ட பிக்பாஸ் அசீம்!
இன்ஸ்டா போஸ்ட்ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களில் நடித்துள்ள த்ரிஷா, 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து விஜய்யுடன் தான் நடித்த படங்களின் க்ளிப்பிங்ஸ் வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ள த்ரிஷா, ஃபயர் மற்றும் ஹார்ட்டின் ஈமோஜிகளை ஷேர் செய்துள்ளார்.
Keerthy Suresh: அவர் மாதிரி புருஷன் வேணும்… ரொம்ப ஓபனா பேசிய கீர்த்தி சுரேஷ்!
த்ரிஷாதான் வெயிட்த்ரிஷா ஷேர் செய்த இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடிப் போயுள்ளனர். செல்லம்… வா செல்லம்… என அன்பு மழை பொழிந்து வருகின்றனர். மேலும் இந்த காம்பினேஷனை காண காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை ஷேர் செய்த சில நிமிடங்களிலேயே லைக்ஸ்கள் குவிந்ததோடு கமெண்ட்ஸ்களும் நிரம்பி வழிகின்றன. தளபதி 67 படத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கவுள்ளார். இருப்பினும் த்ரிஷாதான் விஜய்க்கு ஜோடியாக இருப்பார் எனகூறப்படுகிறது.
Khushbu: அழகு… அழகு… வெட்கப்பட்டு சிரிக்கும் குஷ்பு… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
த்ரிஷா வீடியோ View this post on Instagram A post shared by Trish (@trishakrishnan)
Trisha Thalapathy 67