Thalapthy Vijay: தளபதி 67 அப்டேட்டை வைத்து லோகேஷ் கனகராஜை சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தளபதி 67தளபதி 67 படம் பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்த வாரம் அப்டேட் மேல் அப்டேட் வரும் என அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அப்டேட்டுகள் வந்திருக்கிறது. நேற்று தான் ஏகப்பட்ட அப்டேட்டுகளை விட்டு விஜய் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். ஆனால் இதற்கிடையே நடந்த சம்பவத்தால் லோகேஷ் கனகராஜ் கேலி கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.Thalapathy 67: தளபதி 67 அப்டேட்டால் செம பயத்தில் விஜய் ரசிகர்கள்
த்ரிஷாலோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக தளபதி 67 படக்குழு நேற்று காஷ்மீர் கிளம்பியது. விமான நிலையத்தில் விஜய் மட்டும் அல்ல த்ரிஷாவும் இருந்தார். மாஸ்க், கூலிங் கிளாஸ் அணிந்து தன் அடையாளம் தெரியாதபடி வந்தார் த்ரிஷா. ஆனாலும் ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
அறிவிப்புவிமான நிலையத்தில் த்ரிஷா நின்று கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அப்படி இருந்தும் நேற்று மாலை வெளியான அப்டேட்டில் த்ரிஷா நடிக்கிறார் என்பதை தெரிவிக்கவில்லை. ப்ரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் குறித்து தான் அப்டேட் வெளியிட்டார்கள்.
கிண்டல்நேற்று மாலை வெளியான தளபதி 67 அப்டேட்டுகளை பார்த்தவர்களோ, த்ரிஷாவின் பெயரை அல்லவா முதலில் அறிவித்திருக்க வேண்டும். அவர் தளபதி படத்தில் நடிப்பது விமான நிலைய புகைப்படம் மூலம் தெரிந்துவிட்டது. அப்படி இருந்தும் அறிவிப்பு வெளியிடவில்லை. மண்டை மேலே இருக்கிற கொண்டையை மறந்துவிட்டார் லோகேஷ் என கலாய்க்கிறார்கள்.
மீம்ஸ்நடிகர்கள், ப்ரியா குறித்த அப்டேட்டுகள் வரும் முன்பே விமானத்தில் பயணம் செய்யும் கலைஞர்களின் பட்டியல் வெளியானது. அதன் பிறகு அப்டேட் வந்ததும் அதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். யார் வேண்டுமானாலும் கிண்டல் பண்ணுங்க, நாங்கள் காஷ்மீர் வேலையை மட்டும் கவனிக்கிறோம் என்று இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கேலி
சிம்புThalapathy 67: விஜய்க்கு இருக்கிற பிரச்சனை போதாதுனு இவர் வேறயா, வெளங்கிடும்தளபதி 67 படத்திற்கு தலைப்பை தேர்வு செய்துவிட்டாராம் லோகேஷ் கனகராஜ். ப்ரொமோவில் அந்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி தளபதி 67 ப்ரொமோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் வில்லன்களில் ஒருவராக சிம்புவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது. லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே லோகேஷ் என்கிறார்கள் ரசிகர்கள்.