Lokesh Kanagaraj: தளபதி 67 படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்பது குறித்து விஜய் மேனேஜர் வெளியிட்ட வீடியோ அனைவரையும் கவர்ந்துவிட்டது.
தளபதி 67லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 67 படம் குறித்து தினமும் அப்டேட் தான். இந்த வாரம் முழுவதும் அப்டேட் வரும் என்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். தளபதி 67 படத்தின் ஹீரோயின் த்ரிஷா என்கிற அறிவிப்பை தான் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இந்நிலையில் எதிர்பார்த்த அந்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
அப்டேட்
வீடியோத்ரிஷாவின் அழகிய புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே விஜய், த்ரிஷா நடித்த படங்களின் வீடியோவை சேர்த்து ஒரு க்யூட் வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தளபதியின் மேனேஜர் ஜெகதீஷ். 14 ஆண்டுகள் கழித்து விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து நடிக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜோடி
க்யூட்ஜெகதீஷ் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இந்த அறிவிப்பை இதை விட க்யூட்டாக வெளியிட முடியாது. விஜய்ணாவுக்கு ராசியான ஹீரோயின் த்ரிஷா. அதனாலேயே இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகப் போகிறது. முன்னதாக கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய படங்களில் விஜய்யும், த்ரிஷாவும் சேர்ந்து நடித்தார்கள் என்று அதை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மகிழ்ச்சி
விமான நிலையம்தளபதி 67 படத்தில் த்ரிஷா நடிப்பது நேற்றே அனைவருக்கும் தெரியும். விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழு காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றது. சென்னை விமான நிலையத்தில் தளபதி 67 படக்கழுவுடன் த்ரிஷாவும் நின்று கொண்டிருந்தார். அடையாளம் தெரியாதபடி அவர் வந்திருந்தாலும் ரசிகர்கள் அது த்ரிஷா என்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.
அறிவிப்புவிமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ வெளியான பிறகு நேற்று மாலை தளபதி 67 அப்டேட் வந்தது. அதில் த்ரிஷா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தால் அப்படி எதுவும் இல்லை. த்ரிஷா நடிப்பது தான் தெரிந்துவிட்டதே, அதனால் அந்த அறிவிப்பை தானே முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். மண்ட மேலே இருக்கும் கொண்டய மறந்துவிட்டீர்களா என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்தார்கள்.
Thalapathy 67 Update: மண்ட மேலே இருக்கிற கொண்டய மறந்துட்டீங்களே லோகேஷ்
டிரெண்ட்தளபதி 67 பட அப்டேட் வந்து கொண்டே இருப்பதால் #Thalapathy67update என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. தளபதி 67 படத்தில் ஜானி மாஸ்டர் இல்லை என்பது விஜய் ரசிகர்களுக்கு ஒரே சந்தோஷம். பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் சாண்டி மாஸ்டர் தான் விஜய்க்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.