டெக்னாலஜி துறை என்பது இந்தியாவில் இப்போது அனைத்து துறைகளிலும் வந்துவிட்டது. குறிப்பாக வணிகம், வங்கிகள், தொலைத்தொடர்பு, அரசு வேலைகள், கல்வி துறை, விவசாயம் என அனைத்திலும் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் நடக்கின்றன.
இந்த டெக்னாலஜி துறையை மேலும் வளர்ச்சி பாதைக்கு மாற்ற இந்திய பட்ஜெட் 2023 நிகழ்வில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பட்ஜெட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான டெக்னாலஜி சார்ந்த அறிவிப்புகளை இந்த பதிவில் காணலாம்.
பொதுவான அடையாளம்
வியாபாரம் நடத்தும் அனைவருக்கும் இனி PAN (Permanent Account Number) பொது அடையாள அட்டையாக செயல்படும். இதனால் இனி வணிகர்கள் அவர்களின் வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை இந்த PAN எண்ணை வைத்தே சமர்ப்பிக்கலாம்.
விவசாயிகளுக்கு பொதுவான டிஜிட்டல் தளம்
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக தனியாக ஒரு டிஜிட்டல் தளம் ஒன்றை அமைத்து அதில் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள், விவசாயம் செய்யும் முறை, விவசாயிகளுக்கு அறிவுரை, காப்பீடு திட்டம், சந்தை மதிப்பு, சேவை உதவிகள், விவசாயம் சம்பந்தப்பட்ட ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவி என அனைத்தும் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு டிஜிட்டல் பண பரிமாற்றம் 76% வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் அதன் மதிப்பு 91% உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது 2023-2024 ஆம் ஆண்டு மேலும் வளர்ச்சி அடையும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சேவை
பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பல அரசு தளங்கள் துவங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே Aadhaar, PM Jan Dhan Yojana, Video KYC, India Stack மற்றும் UPI போன்ற சேவைகள் ஏற்கனவே உள்ளன. இவை அனைத்தும் DigiLocker ஆப் உள்ளே இடம்பெற்றுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் டிஜிட்டல் தளங்கள் இதில் சேர்க்கப்படும்.
5G சேவைகள்
இந்தியாவில் 5G சேவையை அதிகரிக்க இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் நிலையங்களிலும் புதிதாக ஆராய்ச்சி மய்யம் தொடங்கப்படும்.
Skill India டிஜிட்டல் தளம்
இந்தியாவில் இளைஞர்களின் திறன் மேம்பாடு செய்ய Skill India டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். இதன்மூலமாக மாணவர்கள் அவர்களின் திறனை மேம்படுத்தி அதிகப்படியான வேலைவாய்ப்பு பெறலாம்.
மருத்துவத்துறையில் டெக்னாலஜி
இந்தியாவில் மருத்துவத்துறையில் புதிய வகை தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை கண்டுபிடிக்க தனியாக திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்படும். இதனால் இந்தியாவில் மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி பெரும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்